Get Adobe Flash player

நெல்லை சுற்றம்

எச்.ஐ.வியுடன் வாழ்பவர்களுக்கான ஆதரவு குழுக்களின் கூட்டமைப்பு

an image திருநெல்வேலி மாவட்டத்தில் எச்.ஐ.வியுடன் வாழ்வோர்களின் தேவைகளை அவர்களாகவே முழுமையாக பெருவதற்காக பஞ்சாயத்து அளவிளான ஆதரவு குழுக்களை ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த பஞ்சாயத்தளவிலான ஆதரவு குழுக்கள் வட்டார அளவில் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது. இவற்றிலிருந்து ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவரைக் கொண்டு, மாவட்ட அமைப்பான “நெல்லை சுற்றம்” உருவாக்கப்பட்டு ஆதரவு குழுக்களின் கூட்டமைப்பாக தமிழ்நாடு சங்க விதி 1978ன் கீழ் திருநெல்வேலி மாவட்டத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த அமைப்பின் மூலம் எச்.ஐ.வியுடன் வாழும் நபர்களின் உடல், மன, பொருளாதார மேம்பாடு என்ற நோக்கத்தோடு அவர்களாகவே செயல்படுகின்றனர். அனுபவ பகிர்வுகள், கற்றுக் கொண்ட பாடங்கள், பயிற்சிகள் மற்றும் ஆதரித்து வழக்காடுதல் மூலமாக பஞ்சாயத்து, வட்டார மற்றும் மாவட்ட அளவிலான செயல்பாடுகள் மூலம் சுய சார்புடன் கூடிய நிலைப்பு தன்மையை மனதில் கொண்டு சமூக அக்கறையுடன் செயல்படும் செயற்குழு உறுப்பினர்களின் வழிகாட்டுதலின்படி திருநெல்வேலி மவாட்டத்தில் சிறப்பாக செயல்பட்டு வருகிறது.